ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தும் தலிபான்களின் ஆட்டத்தை அடக்குவதற்கு அமெரிக்கா பாகிஸ்தானை இராணுவத் தளமாக பயன்படுத்த விரும்புவதாக வெளியான தகவல் உண்மையானது அல்ல என்று பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற படுவதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.
இதனால் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான்களின் ஆதிக்கத்தை அடக்குவதற்கு பாகிஸ்தான் நாட்டை இராணுவத் தளமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் ஊடகங்களில் செய்தி வெளியானதோடு மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டின் டான் பத்திரிக்கையிலும் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்கா, “பாகிஸ்தான் நாட்டை ராணுவத்தளமாக பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பரவிய கருத்து உண்மையல்ல” என்று பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.