Categories
உலக செய்திகள்

தலிபான்களை “நான் நம்பவில்லை”…. அமெரிக்கா மீதான உலக நாடுகளின் குற்றச்சாட்டு…. அதிபர் ஜோ பைடனின் முக்கிய பேச்சு….!!

தலிபான்களை “நான் நம்பவில்லை” என்று அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியேறும் என்று அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிலிருந்தே தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தற்போது அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய இந்த நிலைமைக்கு அமெரிக்காவின் மேல் குறிப்பிட்ட முடிவே காரணம் என்று உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் மீது குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது தலிபான்கள் சொன்னதை செய்யவில்லை என்றால் அவர்கள் மீது பொருளாதார ரீதியாக தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் தற்போது வரை அமெரிக்க வீரர்களின் மீது எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலிபான்களை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |