அமெரிக்க அரசு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பாலும் தீவிரவாத தாக்குதலாலும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது.
அமெரிக்க வெளியுறவு துறை நேற்று முன்தினம் தங்கள் மக்களுக்கு பயண அறிவுறுத்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை ஒன்றாக இருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதில் சுற்றுலா தளங்களிலும் மற்ற பகுதிகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம். எனவே இந்தியாவிற்கு செல்லும் அமெரிக்க மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். தீவிரவாதம் மற்றும் உள்ளூர் குழப்பங்களை நினைவில் வைத்து ஜம்மு காஷ்மீருக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.