Categories
உலக செய்திகள்

ஜனவரி 5-ஆம் தேதி முதல்…. சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியிருக்கிறது.

இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான அமெரிக்க மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீன நாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக  இருந்தாலும், தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வரும் ஐந்தாம் தேதியிலிருந்து கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |