அமெரிக்கா அரசின் உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்துள்ளது.
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானோர் பணிபுரியும் நிறுவனங்களில் கட்டாயமாக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. மேலும் வரும் ஜனவரி 4ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்கள் வாரம்தோறும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில் அமெரிக்கா அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது 5வது வட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை தற்காலிகமாக தடை செய்துள்ளது.