அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஜெர்மன் சேன்ஸலர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு தான் தொலைபேசியில் அழைத்து பேசும் முதல் நபராக ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கல் இருக்க வேண்டுமென்று விரும்பியுள்ளார். ஆனால் அவரோ அமெரிக்கா அதிபரின் அழைப்பை மறுத்துள்ளார். மேலும் ஏஞ்சலா பெர்லினிற்கு வெளியே உள்ள அவரின் கிராமத்து வீட்டில் வார இறுதி நாட்களை செலவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியின் ஓரமாக நடைபயிற்சி செல்வது, காய்கறித் தோட்டங்களை பராமரிப்பது என வார இறுதி நாட்களை அங்கு செலவிடுவார் என்று அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் அந்த அழைப்பை ஏஞ்சலா மறுத்ததால் ஜோ பைடன் பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சனை அழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து போரிஸ் ஜான்சனும் அவரின் முதல் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். குறிப்பாக முன்னாள் அமெரிக்கா அதிபரான டிரம்ப் ஜெர்மனியுடன் சரியான இணக்கத்தை ஏற்படுத்தி கொள்ளாமல் இருந்தார். இதனை தற்பொழுது அதிபராக இருக்கும் ஜோ பைடன் மாற்ற நினைத்தார்.
சான்றாக ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த பொழுது முன்னாள் அதிபர் டிரம்ப் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தற்பொழுதுள்ள அதிபர் ஜோ பைடன் அந்த பணிகளுக்கு அனுமதி வழங்கினார். இது ஜெர்மனியுடன் அமெரிக்கா நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக கருதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.