Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்…. பூஸ்டர் தடுப்பூயை…. செலுத்தி கொண்ட அமெரிக்க அதிபர்….!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்புசி  போட்டுக்கொண்டார்.

அமெரிக்க நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து  வருகின்றது. இதனால் அங்கு  கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் முதல் டோஸ் தடுப்பூசியை 21 கோடி 36 லட்சத்து 57 ஆயிரத்து 193 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 18 கோடி 38 லட்சத்து 88 ஆயிரத்து 980 போட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து அமெரிக்காவில் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அந்நாட்டின்  நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபரான 78 வயது நிரம்பிய  ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசியை  செலுத்திக் கொண்டார். மேலும் அவர்  முதல் டோஸ் தடுப்பூசி கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஜனவரி மாதத்திலும் போட்டுக்கொண்டார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |