Categories
உலக செய்திகள்

சைபர் தாக்குதலால் ஆயுதப்போர் உருவாகும்…. தொடர்ந்து பாதிக்கப்படும் அமெரிக்கா…. எச்சரிக்கை விடுத்த அதிபர்….!!

அமெரிக்கா வல்லரசு நாட்டின் மீது உண்மையான ஆயுதப் போரை தொடுத்தால் அதற்கு மூலகாரணமாக சைபர் தாக்குதலே அமையுமென்று அந்நாட்டின் அதிபர் மறைமுகமாக ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணமென்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனை ரஷ்யா ஏற்க மறுத்துள்ளது. இவ்வாறான சூழலில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் வாஷிங்டனிலுள்ள தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று சைபர் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அமெரிக்கா வல்லரசு நாட்டின் மீது உண்மையான ஆயுதப் போரை தொடுத்தால் அதற்கு மூல காரணமாக அமெரிக்காவின் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் சைபர் தாக்குதலே காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இவ்வாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட தகவல் மறைமுகமாக ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கும் படியாக அமைந்துள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |