Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நாடு.. 9.5 பில்லியன் பணம் முடக்கம்.. வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, தலிபான்களுக்குரிய 10 பில்லியன் டாலர் பணத்தை முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளார்கள். எனவே, அவர்களின் ஆட்சியில் மக்களுக்கும், பெண்களுக்கும் என்ன நிலை ஏற்படப்போகிறதோ? என்ற பதற்றம் ஏற்பட்டது. எனினும் தலிபான்கள், “நாங்கள் மக்களை ஒன்றும் செய்ய மாட்டோம். அனைவரும் அச்சமின்றி இருக்கலாம்” என்று அறிவித்தனர்.

எனினும், அங்கிருக்கும் அழகு நிலையங்களிலும், பொது இடங்களிலும் இருந்த பெண்களின் புகைப்படங்களை பெயிண்ட் வைத்து அழிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அரசு, தலிபான்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது, தலீபான்கள் சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இருக்கிறார்கள்.

எனவே, அமெரிக்க அரசு, தலீபான்கள் அவர்களின் நிதியை பயன்படுத்தாதபடி செய்துவிட்டது. இதற்காக, ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்குரிய 9.5 பில்லியன் டாலர் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியிருக்கிறது.

Categories

Tech |