அமெரிக்க அரசு, குழப்பமான நிலையில் பின்வாங்கியது ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்களுக்கு செய்த துரோகம் என்று பல சர்வதேச ஊடகங்களும் குற்றம்சாட்டி வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் நெருக்கடி நிலையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையாண்ட விதத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்கள் ஒன்றிணைந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டை “கைகழுவுதல்” என்று அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே மிகுந்த வெட்கக்கேடான விஷயம் என்று ஒரு பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
மேலும் ஒரு கட்டுரையாளர் கூறியுள்ளதாவது, ஆப்கானிஸ்தானின் நிலை மற்றும் குழப்பமான நிலையில் பின்வாங்கியது, அமெரிக்க அதிபருக்கான “அரசியல் பேரழிவு” என்று கூறியிருக்கிறார். மேலும் ஒரு பத்திரிகையில் கருத்து எழுதக்கூடியவர், அமெரிக்க நாட்டின் இந்த செயல் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் என்று கூறியிருக்கிறார். மேலும் சில பத்திரிக்கைகளும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.