இரு பெரும் வல்லரசு நாடுகளின் அதிபர்கள் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் முதல் முறையாக காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் சீன அதிபர் கூறியதில் ‘கொரோனா தொற்று பரவல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
இரு நாடுகளும் தங்களின் தகவல் தொடர்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசினார். அவர் கூறியதாவது ‘இரு நாடுகளும் நட்பு உறவுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது நமக்கு மட்டுமின்றி சர்வதேச நாடுகளுக்கும் பயனைத் தரக்கூடியதாக இருக்கும்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியானது மோதலாக மாறக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்கா எப்பொழுதும் அதன் நட்பு நாடுகளுக்கு துணையாக இருக்கும் என்பது அவரின் பேச்சு மூலமாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் இரு நாடுகளும் சர்வதேச அமைதியை நோக்கி பயணிப்பதே தங்களின் முக்கிய குறிக்கோள் என்று தெரிவித்துள்ளனர்.