அமெரிக்கா, சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், “சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நான் நல்ல உறவை கொண்டிருந்தேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது நான் அவ்வாறு உணரவில்லை. கொரோனா வைரஸின் பரவலைத் தொடர்ந்து தனது உணர்வுகள் முழுவதுமாக மாறிவிட்டன. அதனால் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. நான் மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன். எனக்கு அவருடன் மிக நல்ல உறவு இருந்தது, ஆனால் தற்போது நான் நீண்ட காலமாக அவருடன் பேசாமல் இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஹாங்காங்கில் சீனாவின் ஒழுங்குமுறை மற்றும் சர்ச்சைக்குரிய தென் சீன கடல் போன்ற பிரச்சனைகளில் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.