அமெரிக்கா தவறு செய்துவிட்டதாக சுகாதாரத் துறை அலுவலர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்
சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை பலி எடுத்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது அமெரிக்கா. இதனை தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அதிபர் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் ரிக் பிரைட் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது ஜனவரி மாதம் கொரோனா தொற்று தொடங்கியதுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கோரி தான் எச்சரிக்கை செய்ததாகவும் ஆனால் சுகாதாரத் துறை அலுவலர்கள் தனது கருத்தை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக இருந்த என்னை பொறுப்பிலிருந்து விடுவித்து தேசிய சுகாதார நிறுவனத்தின் தேவையற்ற பொறுப்பில் அமர்த்தி உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். Whistleblower Protection Act என்ற சட்டத்தை அமெரிக்க அரசு மீறி இருப்பதாகவும் ரிக் பிரைட் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.