Categories
உலக செய்திகள்

விமான பயணத்தில் பணிப்பெண்களை சீண்டிய இளைஞர்…. சக பணியாளர் செய்த அதிரடி செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

விமான பயணத்தின் போது பணி பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை பிலடெல்பியா நகரத்தத்திலிருந்து மியாமி நகருக்கு சென்று கொண்டிருந்தது. இதனிடையே விமானத்தில் பயணம் செய்த மேக்ஸ்வெல் பெரி (Maxwell Berry) எனும் இளைஞர் குடிபோதையில் இருந்துள்ளார். மேலும் விமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணிப்பெண்களை தொடுதல் போன்ற அநாகரிகமான செயல்களை செய்துள்ளார்.

https://twitter.com/i/status/1422537706173775875

இதனைத்தொடர்ந்து பெண் பணியாளர்கள் ஆண் பணியாளர் ஒருவரிடம் கூற அதை கேட்க வந்த ஆண் பணியாளரையும் தகாத வார்த்தைகள் பேசி முகத்தில் குத்தியுள்ளார். இந்நிலையில் அந்த ஆண் பணியாளர் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உதவியுடன் அவரை இருக்கையில் தள்ளி டேப்பைக் கொண்டு கட்டியுள்ளார். பின்னர் மியாமி விமான நிலையம் வந்தடைந்ததும் பெரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து கத்திக் கொண்டே வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1422635091998687234

Categories

Tech |