Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்…. உக்ரைனுக்கு ஹார்பூன் ரக ஏவுகணைகளை கொடுக்கும் அமெரிக்கா….!!!

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஹார்பூன் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைன் நாட்டிற்கு அளிக்க தீர்மானித்திருக்கிறது.

ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது 115-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. எனவே, அந்நாட்டிற்கு அமெரிக்கா ஆயுத உதவிகளும் செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து உக்ரைன் நாட்டின் படைகளுக்கு வலிமை சேர்க்க கூடிய வகையில் ஹார்பூன் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுக்க தீர்மானிக்கின்றன.

60 மைல் தொலைவிற்கு பாய்ந்து தாக்கக் கூடிய வகையிலான கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உக்ரைனில் குறைவாகவே இருக்கின்றன. எனவே, டென்மார்க் அரசு பழைய ஹார்பூன் வகை ஏவுகணைகளை கொடுக்க தீர்மானித்திருக்கிறது.

டிரக்குகள் மூலம் ஏவக்கூடிய வகையில் இருக்கும் பிளாக் 1 ஹார்பூன் ஏவுகணை, சுமார் 70 மைல்கள் தொலைவிற்கு சென்று தாக்கும். மேலும், பிளாக் 2 போயிங் ஏவுகணை 100 மைல் தூரத்திற்கு சென்று தாக்கக் கூடியது. இதில் உக்ரைன் படைகளுக்கு அமெரிக்கா எந்த வகையை அளிக்கவுள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |