அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்நாட்டில் ஓர் ஆண்டில் மட்டும் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரம் ஆகும். மேலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 130 பேர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கரோலினா மாகாணத்தில் நேற்று மாலை 5 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி தப்பி சென்ற மர்ம நபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Categories