அமெரிக்காவில் நாளுக்கு நாள் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சடலங்களை வைக்க இடமின்றி திணறி வருகிறது
உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவில் சற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாவதை கண்டு அமெரிக்கா அரண்டு போய் உள்ளது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலங்களை வைக்க இடமின்றி பல மருத்துவமனைகள் தவித்து வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவின் டெட்ராயிடு நகரில் இருக்கும் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் சடலங்களாகவே காட்சி அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. சேரில் உட்கார வைத்த நிலை, டேபிளில் படுக்க வைத்த நிலை என அனைத்திலும் சடலங்களே காணப்படுகின்றன.
சவ பேட்டிகள் கிடைக்காத காரணத்தினாலும் சடலங்களை எரிக்க முடியாமலும் அமெரிக்காவில் பல இடங்களில் திணறி வருகின்றனர். அதோடு சடலங்களை வைக்க இடம் இல்லாத காரணத்தினால் ஊழியர்களின் ஓய்வு அறைகளில் வெள்ளை பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு அறையில் இருக்கும் சேர் டேபிள் பெஞ்ச் படுக்கை போன்றவற்றில் சடலங்களை வைத்துள்ளனர்.
தனித்தனி அறைகளில் சடலங்களை வைத்திருந்தாலும் அதனை பாதுகாக்க போதிய வசதி இல்லை என கூறப்படுகிறது. மருத்துவமனைகளில் பிணவரை இருப்பது வழக்கம் ஆனால் அமெரிக்காவை பொருத்தவரை மருத்துவமனையே பிணவறையாக மாறி வரும் சூழலே தற்போதைய நிலை என கூறப்படுகிறது.