Categories
உலக செய்திகள்

இலங்கையில் குழந்தைகளுக்காக… 3000 மெட்ரிக் டன் உணவு வகைகள் அனுப்பிய அமரிக்கா….!!!

இலங்கை நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்காக அமெரிக்க நாட்டின் வேளாண் துறை, 3000 மெட்ரிக் டன் மதிப்பில் உணவு பொருட்களை அனுப்பி உள்ளது.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நாட்டிற்கு இந்தியா உட்பட பல நாடுகள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்க வேளாண் துறையானது, அந்நாட்டு குழந்தைகளுக்கு சுமார் 3000 மெட்ரிக் டன் அளவில் உணவு பொருட்களை அனுப்பியிருக்கிறது.

இது பற்றி அமெரிக்காவின் வெளிநாடு தூதர் கூறியதாவது, இலங்கையில் அதிகமாக பாதிப்படைந்த குழந்தைகளுக்காக எங்கள் நாட்டு மக்களால் அளிக்கப்படும் இந்த உதவியின் நோக்கம், குழந்தைகள் பசி காரணமாக, தங்களின் கல்வியை விட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான். சுதந்திரம் அடைந்ததிலிருந்து தற்போது வரை இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீள அமெரிக்க சார்பில் சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |