Categories
உலக செய்திகள்

பொருளாதாரத் தடை – ஈராக்கை மிரட்டும் ட்ரம்ப்

வாஷிங்டன் : ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால் அந்நாட்டு மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிப்போம் என அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அரங்கேற்றிய வான்வழித் தாக்குதலால், ஈரான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிமுக்கிய தளபதிகளுள் ஒருவரான

இது அமெரிக்கா-ஈரான் மோதலை உச்சத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. ஈரானை தவிர, ஈராக், சவுதி அரேபியா, இஸ்ரேல், சிரியா என மத்தியக் கிழக்கு பிராந்தியமே பதற்றநிலையில் உள்ளது.

அமெரிக்காவின் செயலால் மத்திய கிழக்கு நாடுகள் மேலுமொரு போர் உருவாகக்கூடும் என உலக நாடுகளிடையே அச்சம் தொற்றியுள்ளது.

இந்தச் சூழலில், ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், “அமெரிக்கா படைகள் ஈராக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால் அந்நாடு இதுவரை கண்டிடாத மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்போம். ஈரான் மீது நாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை விஞ்சும் அளவிற்கு மிகத் தடையாக இருக்கும்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், பல பில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்கா, ஈராக்கில் விமான தளங்களை அமைத்துள்ளது. அவற்றுக்கு ஈராக் காசு கொடுக்கும் வரை அமெரிக்கப் படைகள் அங்குதான் தங்கியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |