அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது
அணு ஆயுதங்களை அதிகமாக கையில் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வந்த ஈரானுடன் ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 வல்லரசு நாடுகள் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். அணுசக்தி ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனது அணு ஆயுத கையிருப்பை ஈரான் படிப்படியாக குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்குக் கைமாறாக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்த மேற்குறிப்பிட்ட வல்லரசு நாடுகள் விதிக்கப்பட்ட தடைகளை திரும்பப்பெற வேண்டும்.
ஈரானுடனான இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாக 2018ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார் அதோடு ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய இரண்டு வருடங்களுக்குப் பிறகு இச்சம்பவம் குறித்து ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ்க்கு ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் சாரிப் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
எழுதப்பட்ட கடிதத்தில் “அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது ஐ.நாவின் விதிமுறைகளையும் சர்வதேச சட்டங்களையும் மீறிய செயல். அமெரிக்கா சட்டத்தை மீறியதற்கான விளைவுகளை ஐ.நா. சபை அந்நாட்டை பொறுப்பேற்க வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது