அமெரிக்கா – சீனா இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில் சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது, தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தென்சீனக் கடலில் விமானந் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் 2 ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனக் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்காவின் உளவு விமானம், பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதனை அடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D போன்ற 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் கடலில் ஏவி விட்டது. இதில், DF-21 என்ற ஏவுகணை கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் கருதப்படுகிறது.