Categories
உலக செய்திகள்

ஆடி போன அமெரிக்கா…. அலறும் இத்தாலி…. அரண்ட சீனா … கொரோனாவின் தாக்கம் …!!

சீனாவை மிரட்டிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 629,682 பேர் பாதித்துள்ளனர். 1,38,089 பேர் குணமடைந்த நிலையில் 28,970 பேர் உயிரிழந்துள்ளனர். 462,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 24,282 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் 1,12,560 பேரை தாக்கிய கொரோனா வைரசால் 3,219 பேர் உயிரிழந்துள்ளனர்.  3,219 பேர் குணமைடைந்துள்ள நிலையில் 107,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,666 இக்கட்டான நிலையில் உள்ளனர்.

இத்தாலியில் 86,498 பேரை தாக்கிய கொரோனா 9,134 பேரின் உயிரை பறித்துள்ளது. 10,950 பேர் குணமடைந்த நிலையில்  66,414 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3,732 பேர் இக்கட்டான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கினாலும், அதனை அந்நாட்டு 3 மாதங்களாக போராடி தான் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்நாட்டில் 81,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 74,971  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,295 பேர் உயிரிழந்த நிலையில் 3,128 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 886 பேர் இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட வரிசையில் ஸ்பெயின் நான்காம் இடத்தில் இருக்கின்றது. 72,248 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 5,812 பேர் உயிரிழந்துள்ளனர். 12,285 பேர் குணமடைந்த நிலையில் 54,151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4,165 ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஜெர்மனியை பொறுத்தவரை 53,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 399 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 6,658 பேர் குணமடைந்த நிலையில் 46,283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,581 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஜெர்மனியை தொடர்ந்து அதிக பாதிப்பை பெற்ற ஈரானில் 35,408  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதில் 2,517 பேர் உயிரிழந்துள்ளனர். 11,679 பேர் குணமடைந்துள்ள நிலையில் 21,212 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3,206 பேர் இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் 7ஆவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரான்ஸ் உள்ளது. இங்கு 32,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 1,995 பேர் இறந்துள்ளனர். 5,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 25,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3,787 மோசமான நிலையை எட்டியுள்ளனர்.

8 இடத்தில் இருக்கும் UK_வை பொறுத்தவரை 17,089  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் 1,019 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர். 15,935 பேர் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் 163 பேர் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

அடுத்த இடத்தில் இருக்கும் நாடு சுவிட்சர்லாந்து. இங்கு கொரோனா பாதிப்பு 13,377 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். 1,530 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 11,605 பேர் மருத்துவமானாயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 280 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக நெதர்லாண்ட்ஸ், தென் கொரியா, பெல்ஜியம் என அடுத்தடுத்து 10,000க்கும் கீழ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உள்ளது.

Categories

Tech |