அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் சீன அரசு உதவியுடன் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சைபர் தாக்குதலுக்கு உட்படுத்தபட்டதாக குற்றங்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சீன அரசு உதவியால் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சைபர் தாக்குதலானது சீன நிறுவனங்களின் வணிக நோக்கத்திற்காக செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் அரசாங்க துறைகள் மற்றும் பல்கலைகழங்களுக்கு சொந்தமான கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஹேக் செய்யும் பணியில் 4 சீனர்கள் ஈடுபட்டுவுள்ளதாக தெரியவந்துள்ளது.