தாய்லாந்து நிறுவனங்கள் சில கையுறைகளில் மோசடியில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவின் மியாமி நகரை சேர்ந்த தொழிலதிபர் Tarek Kirschen, தாய்லாந்து Paddy the Room நிறுவனத்தில் இருந்து 2 மில்லியன் டாலர்கள் மதிப்பில் கையுறைளை இறக்குமதி செய்து மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்றுள்ளார். இவற்றை வாங்கிய பலர், அவை புதியவை அல்ல, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கையுறை என்று கூறினர். மேலும், அவற்றை கழுவி சாயமேற்றி புதிதுபோல் ஏமாற்றியதாகவும் புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி சிலர், கையுறையில் இரத்தக்கரை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
எனவே, விநியோகஸ்தர்களிடம் கையுறைகளை பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் Tarek. இந்த சம்பவம் குறித்து Tarek, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் தகவல் தெரிவித்தார். இதேபோல் Louis Ziskin என்பவரும் 2.7 மில்லியன் டாலர்களுக்கு போலி கையுறைகளை வாங்கி ஏமாந்ததால், தன் பனத்தை திரும்பப்பெற தாய்லாந்துக்கே சென்றுள்ளார். ஆனால், மோசடியில் ஈடுப்பட்டவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி தாய்லாந்து போலீசார் Louis-ஐ கைது செய்தனர்.
பின்னர் Paddy the Room நிறுவனத்தில் போலீசார் மேற்கொண்ட ஆய்வில், போலி மற்றும் பயன்படுத்தப்பட்ட கையுறைகள் சாயமேற்றப்பட்டு வேறொரு நிறுவனத்தின் பெயரில் ஏற்றுமதி செய்வதை கண்டறிந்தனர். இதனால் போலீசார் கையுறைகளை கைப்பற்றி, அந்த நிறுவனத்தின் மேலாளரை கைது செய்தனர். ஆனால், அந்த நிறுவனம் மீண்டும் வேறு இடத்தில் இருந்து ஏற்றுமதியை தொடர்ந்தது. இந்த நிலையில், போலி கையுறைகளை எத்தனை மருத்துவமனைகள் மற்றும் உணவகங்களுக்கு பயன்படுத்தியதோ..? எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்களோ..? என தெரியவில்லை.