Categories
உலக செய்திகள்

ரோந்து அடித்த அமெரிக்க கப்பல்கள்….!! இந்திய-பசிபிக் கடலில் பதற்றம் …!!

இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம், கொரோனா பரவல் போன்ற காரணங்களால் அமெரிக்கா சீனா இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் 3 ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அக்கப்பல்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் (டெஸ்டிராயர்கள், க்ரூஸர்) மற்றும் போர் விமானங்களும் உடன் செல்கின்றன. மூன்று வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா மேற்கொள்ளும் இந்த அசாதாரண நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தை தன்வசம் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து Center for Strategic and International Studies’ என்ற ஆய்வு நிறுவனத்தின் China Power Project துறையில் இயக்குனராக இருக்கும் போனி கிளாசர் கூறியபோது, “கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவின் ராணுவம் வலுவிழந்துவிட்டதாக சீன அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வந்தது. இதனை தவறு என்பதை நிரூபிக்கவே அமெரிக்கா இச்செயலை செய்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைகளினால் இந்திய பசிபிக் கடல் எல்லை பிராந்தியத்தின் அமைதி சீர்குலைகின்றது என சீனா வேறு ஒரு கதையை சித்தரிக்கும்” எனவும் கூறினார்.

Categories

Tech |