கனேடியர் ஒருவர் 8 பெண்களை பயங்கரமாக கொலை செய்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்க நெடுஞ்சாலையில் தொடர்ந்து 8 பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஒருவர் நான்தான் கொன்றதாக கூறி போலீசாருக்கும் ஊடகங்களுக்கும் கடிதங்களை அனுப்பி வந்தார். அந்த கடிதங்களில் கையொப்பம் இடாமல் சிரிக்கும் முகம் ஒன்று வரைந்திருந்ததால், அவரை ‘சிரிக்கும் முக கொலையாளி’ என அழைத்தனர்.
மேலும் கடந்த 1995 ஆம் ஆண்டு Julia Ann என்ற பெண்ணை கொலை செய்ததாக கொலம்பியாவை சேர்ந்த அவரது காதலன் Keith Jesperson(66) கைது செய்யப்பட்டார். பின்னர் M.William Phelps என்ற ஊடகவியலாளர் Jesperson-இன் நண்பராக நடித்து அவருடன் தொடர்பில் இருந்தார். அதனால் இவரிடம் Jesperson தான் செய்த கொலைகள் பற்றி கூற இவர்தான் ‘சிரிக்கும் முக கொலையாளி’ என்பது தெரியவந்தது.
இந்த Jesperson-ஐ சிறு வயதில் அவரது தந்தை சாடிஸ்ட் போல பெல்ட்டால் அடித்து இன்பம் காண, பின் அவரது மகன் மற்றும் பெண்களை கொலை செய்து இன்பம் கண்டுள்ளார். இந்த நிலையில் Jespersonஇன் திருமணமத்திற்கு பின்னும் மனைவி Rose Huck, இல்லற உறவில் அவமானப்படுத்தி வேறொரு பெண்ணுடன் தொடர்புள்ளதாக கூறி விவாகரத்து வாங்கினார். இதனால் Jesperson பெண்கள் மீது கடும் கோபம் அடைந்தார்.
இதே போல Taunja Bennett (23) என்ற பெண்ணும் பாலியல் உறவில் Jesperson-ஐ அவமானப்படுத்தி விமர்சித்தார். இதனால் அந்த பெண்ணை எந்த தடயமும் இன்றி கழுத்தை நெறித்துக் கொன்றார். இந்த கொலையை வேறொரு தம்பதி ஒப்புகொண்டனர். இதனால் Jesperson தொடர்ந்து பாலியல் தொழிலாளிகள் பலரை அடையாளம் தெரியாத வகையில் கொன்று உடலை சிதைத்து வீசிவிட்டு சென்றுள்ளார்.
இது பற்றி Jesperson, தான் 166 பெண்களைக் கொலை செய்ததாக கூறினார். ஆனால் 8 பெண்களுடன் மட்டுமே அவரது தொடர்பை போலீசார் நிரூபித்துள்ளனர். தற்போது Jesperson-க்கு பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் Jesperson இதுவரை ஊடகவியலாளர் William தன் நண்பர் என எண்ணுகிறார். ஆனால் William இனி அவரிடம் நான் பேசவே மாட்டேன் என்று கூறிவிட்டார்.