அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் .
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் ஆடவருக்கான முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார் .இதில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் முர்ரே கைப்பற்ற, 2-வது செட்டை 7-6 என்ற கணக்கில் சிட்சிபாஸ் கைப்பற்றினார்.
இதனை சுதாரித்துக் கொண்ட ஆன்டி முர்ரே 3-வது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் ஆக்ரோஷமாக விளையாடிய சிட்சிபாஸ் 4-வது மற்றும் 5-வது செட்டை 6-3, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார் .இறுதியாக 2-6, 7-6, 3-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற சிட்சிபாஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.