Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : நட்சத்திர வீராங்கனை செரீனா விலகல் …. ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க  நட்சத்திர  வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின்  நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார் .

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’ உடல்நிலையை கவனமாக பரிசீலித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் ஆலோசனையின்படி தொடைத் தசை நார் கிழிவில் இருந்து முழுமையாக குணமடைய அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலக முடிவு செய்தேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார் .

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் இதுவரை  23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |