அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார் .
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் , நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூரும் மோதினர் .
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கிலும் ,2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் .இறுதியாக 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.