Categories
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ருமேனியா வீராங்கனை சிமோனா …. முதல் சுற்றில் வெற்றி ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர்  ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் .

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது .

இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் இத்தாலியை சேர்ந்த கமிலா ஜியார்ஜியை  எதிர்கொண்டார். இதில் 6-4, 7-6 (7-3)  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிமோனா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Categories

Tech |