ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களை தொடர்ந்து பெரியயளவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலை தூக்குவார்கள் என்பதால் மீண்டும் அந்நாட்டிற்கு அமெரிக்காவின் ராணுவ படைகள் திரும்பலாம் என்று அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் குடியரசு கட்சியின் தலைவர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களை தொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் தலைதூக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் காலங்களில் பயங்கரவாதிகள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காபூல் விமான நிலையத்தில் சிக்கியவர்களை மீட்கும் போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ஆகையினால் அமெரிக்காவின் ராணுவ படைகள் மீண்டும் தலிபான்கள் தற்போது ஆட்சி அமைக்கவிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக அமெரிக்க குடியரசு கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.