2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூசி க்குழுகிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த ஐந்தாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூசி க்குழுகிற்கு இன்று அறிவிக்கப்பட்டது. உலகளாவிய தனி மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர் என நோபல் கமிட்டி அவரைப் பாராட்டி உள்ளது. கடந்த 1943ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த லூசி க்குழுற்க் தற்போது மென்சஸ்அஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.
நியூ ஹவென் இல் உள்ள எல்ஐ பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 12 கவிதை தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். புளிச்சர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.