இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க தயார் என்று அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ரஷ்யாவிடமிருந்து எஸ்400 ரக ஏவுகணைகளை அதிகம் வாங்குவது இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மட்டுப்படுத்திவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏவுகணை பாதுகாப்பு முறையை ரஷ்யாவிடமிருந்து பாரம்பரியமாக இந்திய ஒப்பந்தமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து எஸ்700 ரக ஏவுகணைகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது.
இது அமெரிக்கா இந்தியா இடையிலான உறவில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா மறைமுகமாக எச்சரித்திருந்தது.இதனை தொடர்ந்து வெளியுறவு துறை சார்ந்த அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவில் அந்நாட்டு வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஸ்டீவ் வாஹ் அமெரிக்க பாதுகாப்புத்துறை உறவுகள் குறித்து விளக்கம் அளித்தார் அதில்,
இந்தியாவில் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்ற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க அரசு நிர்வாகம் தெளிவான நிலை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் நினைத்துப் பார்த்திராத வகையில் இருதரப்பு பாதுகாப்பு துறை உறவுகள் மேம்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் ரஷ்யாவிடம் இருந்து பாரம்பரியமாக இந்திய ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்து வருகிறது என்றாலும் தற்போதைய எஸ் 700 ரக ஏவுகணைகளை வாங்குவது இந்திய அமெரிக்க ஒத்திசைவை மட்டப்படுத்திவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.