அமெரிக்கா ராணுவ வீரர்கள் முழுவதுமாக ஆப்கானில் இருந்து வெளியேறியதை தலீபான்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுவதை அடுத்து அந்நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் நேற்றுடன் ஆப்கானில் இருந்த கடைசி அமெரிக்கா ராணுவ வீரரும் வெளியேறினார். இதனால் தலீபான்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தங்களின் மகிழ்ச்சியை வெளியுலகிற்கு காட்டுவதற்காக சாலைகளில் பேரணியாக சென்றனர். அதிலும் வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகள் முழங்கினர். குறிப்பாக காபூல் நகரில் வெற்றியை கொண்டாடும் விதமாக சுமார் 313 தலீபான்கள் காரில் பயணம் செய்தனர். அதில் பலர் ராணுவ சீருடையுடனும், சிலர் சாதாரண உடைகளையும் அணிந்திருந்தனர்.
அப்பொழுது திடீரென்று காரின் வேகம் அதிகரித்ததால் எதிர்பாராதவிதமாக இரண்டு தலீபான்கள் அதிலிருந்து கீழே விழுந்தனர். இதனால் அவர்களது மகிழ்ச்சி இடையிலே தடைபட்டது. மேலும் தலீபான்கள் வலியோடு அந்த இடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர். இதனால் அங்கு சிறிது அமைதி நிலவியது. அதன் பிறகு அனைவரும் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். குறிப்பாக அமெரிக்கா ராணுவ வீரர்கள் ஆபத்து நிறைந்த ஆயுதங்களைக் ஆப்கானில் விட்டுச்சென்றதாகவும் அது தலீபான்களின் கையில் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.