ராணுவ படைகள் விட்டுச்சென்ற நவீன ஆயுதங்களை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் கடந்த 31 ஆம் தேதி வரை அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கு தலீபான்கள் கெடு விதித்திருந்தனர். மேலும் தலீபான்களுக்கு பயந்து உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறினர். இதனையடுத்து நேற்று முன்தினம் அமெரிக்கப் படைகள் முற்றிலும் ஆப்கானை விட்டு வெளியேறியதை அடுத்து தலீபான்கள் ஆப்கானை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக படைகள் அனைத்தையும் திரும்ப பெற்ற அமெரிக்கா ராணுவம் ஏராளமான விமானங்கள், ஆயுதங்கள், நவீன கருவிகள் போன்றவற்றை ஆப்கானிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் காபூல் மற்றும் கந்தஹாரில் இருந்து நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதனை கொண்டு தலீபான்கள் அணிவகுப்பு ஒன்று நடத்தியுள்ளனர். குறிப்பாக அவர்கள் விமான போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கத்தார் அரசின் உதவியையும் நாடியுள்ளனர். இதனையடுத்து கத்தார் அரசும் தலீபான்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விமான போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப குழு ஒன்றை காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.