கொரோனாவை தடுக்க செயற்கை ஆன்டிபாடிகளை உடலில் செலுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் ஒருபுறம் சிகிச்சை வழங்கி வரும் நிலையில் மற்றொரு புறம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு புதிய யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டு முதற்கட்ட பரிசோதனை முடிவடைந்துவிட்டது. தற்போது அமெரிக்காவின் மவுட் சினாய் பகுதியில் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஆன்டிபாடி எனும் நோய் எதிர்ப்பு சிகிச்சை முறை குறித்து புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக இயற்கையாகவே உடலில் ஆன்டிபாடிகள் உருவாகி வைரஸ்களை தடுக்கும். ஆனால் கொரோனா வைரஸ் புதிதாக இருப்பதனால் செயற்கை ஆண்டிபாடியை உடலில் செலுத்தி சிகிச்சை மேற்கொள்வதற்கான முயற்சியில் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.