Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 80 டன் ஆயுதங்களா…? உக்ரைனுக்கு அனுப்பிய அமெரிக்கா… அதிகரிக்கும் பதற்றம்…!!!

அமெரிக்காவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு விமானங்கள் மூலமாக சுமார் 80 டன் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கடந்த 2014ம் வருடத்தில் உக்ரைன் நாட்டினுடைய கிரிமியா என்ற  தீபகற்பத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை அதிகரித்தது.

இந்த விவகாரத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா, தங்கள் படைகளை குவித்து கொண்டிருக்கிறது. மேலும், அமெரிக்கா தலைமையில் இருக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை இணைக்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கும் எண்ணம் கிடையாது என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்கா, ரஷ்யாவின் இந்த கூற்று நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என்று கூறியிருக்கிறது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி இதுபற்றி கூறியிருப்பதாவது, ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தங்களால் தடுக்க இயலாது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்ன செய்வார்? என்பது தொடர்பான எந்த முன்னறிவிப்பும் எங்களிடம் கிடையாது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தால், அதிகப்படியான பின்விளைவுகளை சந்திக்க நேரும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், உக்ரைனின் பாதுகாப்பு மந்திரியான ஒலெக்சீ ரெஜ்னிகோவ் வெளியிட்டிருக்கும் தகவலில், தங்கள் நாட்டிற்கு அமெரிக்காவில் இருந்து சுமார் 10 விமானங்கள் வந்திருக்கிறது. ஒரே நாளில் வந்த இரண்டு விமானங்களில் 80 டன் ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |