ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன.
ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ் இருவரும் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். அதில் ரஷ்ய பிரச்சனை போன்ற பலவற்றை குறித்து ஜோபைடனுடன், ஓலப் பேசி இருக்கிறார். இது தொடர்பில் வெள்ளை மாளிகை தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டிற்கு அளிக்கும் எங்களின் ஆதரவு தொடரும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் மனித நேயம், பொருளாதாரம், பாதுகாப்பு குறித்த ஆதரவுகளை வழங்குவதில் உறுதியுடன் உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது.