அமெரிக்க அதிபரான ஜோ பைடன், மூத்த ராஜதந்திரி மற்றும் வர்த்தக கொள்கை நிபுணரான பீட்டர் ஹாஸ் என்பவரை வங்காள தேசத்திற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்துள்ளார்.
மூத்த தூதரக அதிகாரி மற்றும் வர்த்தக கொள்கை நிபுணரான பீட்டர் ஹாஸ் என்பவர் வெளியுறவுத் துறையின் 5 புவியியல் பணியகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது வெளியுறவுத் துறையினுடைய வணிக விபரம் மற்றும் பொருளாதாரத்தின் முதன்மை துணை உதவி செயலாளராகவும், மாநிலத்தின் உதவி செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
மேலும் இவர் முன்னதாக பலவிதமான முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் பீட்டரை வங்காள தேசத்துக்கான அமெரிக்காவின் தூதராக நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.