இரு நாட்டு முக்கிய தலைவர்கள் சந்திப்பில் பேசப்பட்டது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா நாட்டின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் இன்று வாஷிங்டனில் வைத்து இந்தியா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அதிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் “பாகிஸ்தான் விவகாரம் குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தாமாக முன்வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளினால் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டுமெனில் பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். தற்பொழுது ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதற்கிடையில் ஹக்கானி அமைப்பினற்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளிப்பதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா துணை அதிபரான கமலா ஹாரிஸ் தாமாகவே முன்வந்து அறிவுரைகளை கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.