Categories
உலக செய்திகள்

தற்காப்பு தாக்குதல் போதாது; தில்லா ஏறி அடிக்கணும் ஆயுத உதவி செய்யுங்க…. உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை….!!!

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்காக இஸ்தான்புல்லில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தீர்மானத்தில் உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிவ் உள்ளிட்ட நகரங்களில் தனது தாக்குதலை குறைப்பதாக ரஷ்யா தெரிவித்தது. இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்யா தலைநகர் அருகே தனது தாக்குதலை அதிகப்படுத்தியது.இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் “பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எடுக்கவில்லை என்றும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்து இரு நாட்டு  தூதுக்குழுக்களும் நாடு திருப்பியது” என்று கூறினர்.

இதனை தொடர்ந்து தாக்குதலை குறைப்போம் என்று ரஷ்யாவின் வாக்குறுதியை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நம்பவில்லை. என்னென்றால் உக்ரைன் அதிபரை சரணடை வைப்பது தான் அவர்களின் நோக்கம். இருப்பினும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ‘அமைதிக்காக ஒரு பகுதியைக் கூட விட்டுத்தர மாட்டோம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைன் நோட்டா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுதங்கள் உதவியால் ரஷ்யாவின் ராணுவத்தை எதிர்த்து பதில் தாக்குதல் கொடுத்தது. இந்த தாக்குதலால் தனது தரைவழி தாக்குதலை தொடர முடியாமல் ரஷ்யா துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணை, பீரங்கி, குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் மரியுபோல், இர்பின் உள்ளிட்ட நகரங்களை தரைமட்டமாக்கிய ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்த உக்ரைன் நகரங்களை மீட்டது. இதற்கிடையில் போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூறி வந்தாலும் அமெரிக்கா, பிரிட்டன்  நாடுகள் பெருமளவில் ஆயுத மற்றும் பண உதவிகள் செய்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா தனது வாக்குறுதியை மீறி தாக்குதல்களை நடத்தி வருவதால் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம் தங்களுக்கு மேலும் ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில். “ருபாய் 3,800 கோடி உதவி அளித்துள்ளது அதிபர் ஜோ பைடனுக்கு எனது நன்றி. தற்காப்பு தாக்குதல் மட்டுமே போதாது தக்க பதிலடி கொடுக்க வேண்டும். எனவே ரஷ்ய படையெடுப்பை எதிர்க்க எங்களுக்கு மேலும் ஆயுதங்கள் தேவைப்படுகிறது. நாங்கள் உண்மையில் சுதந்திரமாகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் ஒன்றாக போராடுகிறோம் என்றால் இந்த கடினமான திருப்புமுனையில் உதவி கேட்டக எங்களுக்கு உரிமை உள்ளது. டாங்கிகள், விமானம், பீரங்கி அமைப்புகள் மற்றும் சுதந்திரம் என்பது கொடுங்கோன்மையை விடை மோசமான ஆயுதமாக இருக்க வேண்டும். நாங்கள் இதற்கு தயாராகி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெளன்கியின் வீடியோவில். சர்வதேச துறைமுகங்களின் உள்ள ரஷ்ய கப்பல்கள் தடை செய்யப்பட்டு மற்ற நாடுகளை தங்கள் அணுசக்தி ஏவுகணைகள் மூலம் அச்சுறுத்துவதை நிறுத்தம் வரை சக்தி வாய்ந்த பொருள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். உங்களிடம் மிகச் சிறந்த ஆயுதமேந்திய பணியாளர்கள் வாகனங்கள், புஷ்மாஸ்டர்கள் உள்ளன. அதனை தந்து பிற உபகரணங்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளர்.

உக்ரைன் ரஷ்யா தூதுக்குழு பேச்சுவார்த்தை ரத்தான நிலையில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என்று உக்ரைன் தூதுக்குழுவில் தலைவர் டேவிட் அருமையா தெரிவித்துள்ளார். இதற்கிடையே போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்காததால் உக்ரைன் தூதர்களான ஜார்ஜியா மற்றும் மொராக்கோவுக்கான   ஆகியோரை அதிபர் ஜெலன்ஸ்கி திரும்ப அழைத்துள்ளார்.

இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ஜெர்மி ப்ளெமிங் கூறுகையில் ரஷ்ய அதிபர் புதின் படையெடுப்பை பெரிய அளவில் தவறாக மதிப்பிட்டுள்ளார். பொருளாதார தடைகளை அவர் குறைத்து மதிப்பிட்டு விரைவான வெற்றியை பெறுவதற்காக தனது ராணுவத்தின் திறன்களை அவர் மிகைப்படுத்தி மதிப்பிட்டார். ஆயுதங்களும், மன உறுதியும் இல்லாத ரஷ்ய வீரர்கள் உத்தரவுகளை நிறைவேற்றாமல் தங்கள் சொந்த உபகரணங்களை நாசமாக்குவது மற்றும் தற்செயலாக தங்கள் சொந்த விமானத்தை சுட்டு வீழ்த்துவது நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்

Categories

Tech |