Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்…. 3 மாதங்கள் விமான நிலையத்தில் தஞ்சம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியதால் கைது செய்யப்பட்ட இந்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சிக்காகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்த தாடி மீசையுடன் காணப்பட்ட ஆதித்யா சிங் (36) என்பவரை அத்துமீறி நுழைந்ததாக போலீசார் கைது செய்தனர். இந்தியரான இவர் 6 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து Oklahoma மாகாணத்தில் முதுகலை கல்வி பயின்றார். பின்னர், கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து, விருந்தோம்பல் துறை பணியாளராக பணியாற்றியவர், தனது நண்பரின் தந்தையை கவனித்தும் வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, விசாக்காலம் முடிவடையும் நாள் நெருங்கியதும் இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்தார். எனவே, கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து சிக்காகோ விமான நிலையம் வந்திருக்கிறார். ஆனால், இந்தியாவுக்கு சென்றால் கொரோனா வரும் என பயந்து சிக்காகோ விமான நிலையத்திலேயே தங்கினார்.

மேலும் விமான நிலைய ஊழியர் தவறவிட்ட அடையாள அட்டை வைத்துகொண்டு, 3 மாதங்களாக மறைந்திருந்த ஆதித்யாவை ஜனவரி மாதம் போலீசார் கைது செய்தனர். பின்னர் விபரம் அறிந்த அவரது நண்பர்கள், ஆதித்யா மிகவும் சிறப்பான விருந்தோம்பல் பணியாளர் என்று கூறினர். தற்போது ஆதித்யாவை நீதிபதி ஒருவர் இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

இது குறித்து விமான நிலையத்தின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம், “ஆதித்யா அத்துமீறிலிலோ, பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழையவோ இல்லை. மற்ற பயணிகளை போன்று விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்குள் வந்தார். ஆதித்யா எதற்காக விமான நிலையத்தில் தங்கினார் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், கைது செய்யப்படும் வரை சாதாரண பயணி, விமான நிலைய ஊழியரை போலவே இருந்துள்ளார்” என்றும் கூறினர்.

Categories

Tech |