அமெரிக்கா உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குதாக தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரால் அந்நாட்டிலிருந்து 35 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு அகதிகளாக வெளியேறிய மக்கள் பக்கத்து நாடுகளான ருமேனியா, ஸ்லோவாகியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் ஒரு உயர் அதிகாரி, அமெரிக்கா ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளை வரவேற்கிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டிற்கு, அமெரிக்கா மேலும் உதவியளிக்க வேண்டும் என்று பல அமைப்புகள் வலியுறுத்திய நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.