Categories
உலக செய்திகள்

அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளுமா…? உற்று நோக்கி வரும் சீனா… காரணம் என்ன…?

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பதை தொடர்ந்து, அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்று சீனா கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பது, வருங்காலத்தில் சீனாவும் தைவான் மீது போர் தொடுப்பதற்கான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தைவான் நாட்டின் மீது சீனா போர் விமானங்களை அனுப்புவது வருத்தமளிக்கும் நிலையை உண்டாக்கியிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்கா தங்கள் படைகளை அனுப்பும் பட்சத்தில் தைவான் நாட்டிற்கும் நாளை இதே நிலை ஏற்படும் என்று சீனா கருதுகிறது.

எனினும், இந்த இரண்டு சூழ்நிலைகளும் ஒன்று இல்லை என்றும் தைவான், உக்ரைன் போன்று கிடையாது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் நாட்டைக் காட்டிலும் தைவான், அமெரிக்காவிற்கு அதிக நெருக்கமான நாடு என்பது காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |