Categories
உலக செய்திகள்

விமான ரத்தானதால் அடுத்த விமானத்திற்கு…. காத்து கொண்டிருந்த பெண்….பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்….!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் Missouri பகுதியை சேர்ந்த Angela Caravella (51) பெண்ணொருவர் ஒரு மாதத்திற்கு தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். இதனிடையே விமானம் ரத்து என்ற அறிவிப்பு வந்ததால் அடுத்த விமானத்திற்கு காத்துக்கொண்டிருக்கும் பொழுதில் அருகில் இருந்த சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே லாட்டரி சீட்டு ஒன்றையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு ஒரு மில்லியன் டாலர்(19கோடிக்கு மேல்) பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில் அடுத்த விமானத்திற்கு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் பொழுது போகவில்லை என்பதற்காக ஷாப்பிங் செய்யத் சென்றேன் என்றும் அப்போதுதான் லாட்டரி வாங்கினேன் என்றும் கூறினார். மேலும் அதில் இவ்வளவு மிகப்பெரிய பரிசு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |