அமெரிக்காவில் பிரபல ஆபாச நடிகை திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஆபாச நடிகை லாரன் ஸ்காட். இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் இவரின் கணவர், தான் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, லாரன் ஸ்காட், உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியதோடு, விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் படி, காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வருடம் மே 25 ஆம் தேதி அன்று ஒரு அதிகாரி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை முட்டியால் அழுத்தி கொலை செய்தது, உலகளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்நிலையில், கடந்த மே 4ஆம் தேதியன்று ஜார்ஜ் பிளாய்டின் உருவம் வரையப்பட்டிருந்த சுவரின் முன்பு, இந்த நடிகை, மேலாடை அணியாமல் நடந்து சென்றிருக்கிறார். மேலும் அதனை புகைப்படமாக எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனவே ஜார்ஜ் பிளாய்டை அவமரியாதை செய்ததாக இணையதளவாசிகள் கடுமையாக விமர்சித்தனர்.
எனவே ஜார்ஜ் பிளாய்டனின் ஆதரவாளர்கள் அவரை கொலை செய்திருக்கலாம். எனினும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நடிகையின் உறவினர் ஒருவர் கூறுகையில், லாரனின் தாத்தாவும் பாட்டியும் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். எனவே அவர் மன அழுத்தத்தில் இருந்தார். மேலும் ஆவிகளின் சத்தம் அவருக்கு கேட்டுள்ளது. அவர் அவைகளுடன் பேசியதாக தெரிவித்திருக்கிறார்.