அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் உலகில் கொரோனா பாதிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார்.
உலக நாடுகளில் கொரோனா தொற்று, மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. எனவே, தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் அறிவியல் நிபுணர், உலகில் கொரோனா பரவல், விரைவில் முடிவடையும் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குனரான டாக்டர் குதுப் மஹ்மூத் தெரிவித்திருப்பதாவது, “இந்திய நாட்டின் தடுப்பூசிகள், உலக நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. இந்தியாவில் ஒரு ஆண்டில் 60% தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது.
கொரோனா தனித்துவம் கொண்ட வைரஸ். அது அதிக உருமாற்றங்ளை உடையது. கொரோனோ விரைவில் முடிவடையும். இந்த வருடத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மிக விரைவாக நாம் மீண்டு வருவோம் என்று கருதுகிறேன். எனவே, தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.