அமெரிக்காவில், ஒரு தம்பதி பழைய பள்ளி பேருந்து ஒன்றை, நடமாடும் வீடாக மாற்றி அசத்தியுள்ளார்கள்.
அமெரிக்காவில் வசிக்கும், எலிசபெத்-ஸ்பைக் என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை இருக்கிறார்கள். இவர்கள் தான் பழைய பேருந்தை வீடாக மாற்றியமைத்து பயணித்து வருகிறார்கள். இதுபற்றி எலிசபெத் தெரிவித்துள்ளதாவது, சிறுவயது முதலே என் கணவருக்கு பேருந்தை புதுப்பிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது.
எனவே, பழைய பேருந்து ஒன்றை 3,500 அமெரிக்க டாலருக்கு வாங்கி, 15,000 டாலர்கள் செலவில் உட்புறத்திலும், வெளிப்புறதிலும் எங்களுக்கு விருப்பமான நிறத்தை பெயிண்ட் செய்தோம். அதன்பின்பு, சிறிதான சமையலறை, மூன்று மெத்தைகள் மற்றும் குளியலறை போன்றவற்றை வடிவமைத்தோம்.
மேலும், மின்சார உபயோகத்திற்காக சோலார் பேனல்களையும் பொருத்தியிருக்கிறோம். தற்போது வரை, சுமார் 16 மாநிலங்களுக்கு எங்களின் பேருந்தில் பயணித்திருக்கிறோம். இது முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது என்று கூறியிருக்கிறார்.