Categories
உலக செய்திகள்

வேற லெவல்…. அமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியில்…. இந்திய வம்சாவளி…!!!

அமெரிக்காவின் FedEx நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் FedEx என்ற நிறுவனம் கொரியர் வர்த்தகத்தில் உலகளவில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 50 வருடங்களை தாண்டி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தினுடைய நிறுவனர் ஃபிரெக்ட்ரிக் ஸ்மித் ஜூன் இம்மாதம் முதல் தேதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சுமார் 5, 70,000 பணியாளர்கள் இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு பூர்விகம், கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ஆகும். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்நிறுவனத்தில் பணியாற்றி பல முக்கிய பதவிகளில் இருந்திருக்கிறார்.

Categories

Tech |