Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணிகள்…. இந்தியரை கடுமையாக திட்டிய அமெரிக்கர்…!!!

போலந்தில், இந்தியரை ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணிகள் என்று கூறி அமெரிக்க சுற்றுலா பயணி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இனரீதியாக தாக்கப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், போலந்து நாட்டிற்குச் சென்ற அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ஒரு இந்தியரை பார்த்து, வீடியோ எடுத்துக்கொண்டே, எதற்காக போலந்து நாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? அமெரிக்க நாட்டிலும் பல பேர் இருக்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். மேலும், ஒட்டுண்ணி போன்று ஐரோப்பாவை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று திட்டியுள்ளார்.

American tourist in Poland goes on racial tirade against Indian guy
byu/User_Name13 inPublicFreakout

என்னை வீடியோ எடுக்காதீர்கள் என்று பல தடவை அந்த நபர் கூறியும், அதனை கேட்காமல் தொடர்ந்து அவர் பின்னல் சென்று கேமராவை வைத்துக்கொண்டு, f**king up Europe என்று கூறி இனவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |